திருப்பூர் மாவட்டம் அவிநாசி - கோவை சாலை சீனிவாசபுரம் பகுதியில் இயங்கும் பேட்டரி கடையில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், கனரகவாகனங்கள் மற்றும் வீட்டுக்கு உபயோகிக்கக்கூடிய மின் மாற்றிபேட்டரிகள் உட்பட அனைத்து ரக பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வது, புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்துபணிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
நேற்றுமதியம் பழுது நீக்கவந்த பேட்டரிக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டது. எதிர்பாராதவிதமாக அதில் இருந்து திடீர் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அவிநாசி தீயணைப்புத் துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.