Regional03

இளைஞருக்கு கத்திக்குத்து :

செய்திப்பிரிவு

திருப்பூரில் பல்வேறு வழக்குகளில்தொடர்புடைய இளைஞரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக, திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு(25). பின்னலாடை நிறுவன தொழிலாளி. இவர் நேற்றுராதா நகரில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போதுதிருப்பூர் யுனிவர்சல் சாலையில் மதுபானக் கடை அருகே, மர்மநபர்கள் சிலர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.காயமடைந்த பாபுவை அப்பகுதியினர் மீட்டு, திருப்பூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பாபு திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகளில் சிறைக்கு சென்றவர். வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT