சேலத்தில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை வர்மா கார்டனில் வசித்து வருபவர் பாஸ்கர் (63). இவரது மனைவி கல்பனா (59). இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஐஸ்வர்யாஎன்ற மகளும் உள்ளனர். இவர்கள்இருவருக்கும் திருமணமாகி விட்டது. நேற்று பாஸ்கருக்கும் அவரது மனைவி கல்பனாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அடுத்த அறையில் இருந்தமகன் மற்றும் மகள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது, கல்பனா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் பாஸ்கர் இருந்தார். தகவலறிந்து வந்த வீராணம் போலீஸார் கல்பனாஉடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பாஸ்கருக் கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பாஸ்கரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.