Regional02

திருப்போரூர் வசந்த மண்டபத்தில் அருள்பாலித்த கந்தசுவாமி :

செய்திப்பிரிவு

உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே, சந்நிதி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் மீண்டும் கோயிலை சென்றடைந்தார். அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்தின் கடைசி நாளான 26-ம் தேதி மாலையில், கோயில் வளாகத்தில் கந்தசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT