Regional03

கடலூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி - காணொலி காட்சியில் வாக்கு எண்ணுமிட முகவர்கள் கூட்டம் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி வாக்கு எண்ணுமிட முகவர்கள் கூட்டம் நடை பெறுகிறது.

கடலூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்வெளியிட்டுள்ள அறிக்கை:

வாக்கு எண்ணிக்கையின் போதுகடைபிடிக்க வேண்டிய செயல் பாடுகள் குறித்தும் கழக சட்ட ஆலோசகரும், மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்க றிஞர் இளங்கோ வரும் 27-ம் தேதிசெவ்வாய்க்கிழமை மாலை 4 மணிஅளவில் காணொலி வாயிலாக விளக்கம் அளிக்க உள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்டத்தி லுள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும்கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்திட வேண்டும். குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வட லூர் மங்கையர்க்கரசி திருமண மண்டபம், கடலூர் தொகுதிக்கு கடலூர் தேவி ஹோட்டல், புவனகிரி தொகுதிக்கு சேத்தியாத் தோப்பு வேலவன் திருமண மண்டபம், சிதம்பரம் தொகுதி சிதம்பரம்ஏ.ஆர்.திருமண மஹால், காட்டு மன்னார்கோவில் தொகுதிக்கு

காட்டுமன்னார்கோவில் மணியன் திருமண மண்டபம் ஆகியஇடங்களில் கூட்டம் நடைபெறுகி றது,

இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், வாக்கு எண்ணும் முகவர்கள் மற்றும் அந்தந்த தொகுதியில் தேர்தல்பணிக்கு நியமிக்கப்பட்ட வழக் கறிஞர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT