திண்டுக்கல்லில் நடந்த புத்தகக்காட்சியில் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வையிட்ட பொதுமக்கள். 
Regional02

உலக புத்தக தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் புத்தகக் காட்சி :

செய்திப்பிரிவு

பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் பிச்சாண்டி அரங்கில் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. காலை முதல் நடைபெற்ற புத்தகக் காட்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

‘ஏவாளின் 7 மகள்கள்’ என்ற தலைப்பில் புத்தகத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், துளிர் மீடியா விஷன் நிறுவனம் சார்பில் அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT