Regional02

சேலத்தில் விஷ ஊசி போட்டு செவிலியர் தற்கொலை :

செய்திப்பிரிவு

சேலத்தில் செவிலியர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் தளிகாரகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் பவித்ரா (21). நர்சிங் முடித்து விட்டு, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் (22-ம் தேதி) காலை பணி முடித்து விட்டு பவித்ரா, மருத்துவமனை விடுதி அறைக்கு சென்றுள்ளார். மாலை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்காததால், உடன் பணியாற்றும் செவிலியர்கள் அறை ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, பிவித்ரா அறைக்குள் மயங்கி கிடந்தார்.

அஸ்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீஸார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பவித்ரா இறந்து கிடந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பவித்ரா தனுக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செவிலியர் பணி பிடிக்க வில்லை என்று பெற்றோ ரிடம் பவித்ரா கூறி வந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT