Regional02

பள்ளி மாணவியை திருமணம் செய்த வழக்கில் - நாமக்கல், ஈரோட்டில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது :

செய்திப்பிரிவு

பள்ளி மாணவியை திருமணம் செய்த வழக்கில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும்ஈரோட்டில் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் நங்க வள்ளியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (23). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த அருவங்காடு பகுதியில்உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது 9-வது படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஹரி கிருஷ்ணன் அழைத்துச் சென்றுள் ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீஸார்,நங்கவள்ளி பகுதியில் ஹரிகிருஷ்ணனிடம் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமியைக் கடத்திச் சென்று ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்ததாகபோக்சோ சட்டத்தின் கீழ் ஹரிகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.

கொடுமுடியில் ஒருவர் கைது

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரியா தேவி, சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், மலையம் பாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், லட்சுமணனைக் கைது செய்தனர். குழந்தைகள் நல குழுமம் மூலம், அரசு காப்பகத்தில் சிறுமி தங்க வைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT