திருநெல்வேலியில் வாசுகி வளர் தமிழ் மன்றத்தின் சார்பில் ப.தளவாய் மாடசாமி எழுதிய ‘புத்தம் புதுமைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து தலைமை வகித்தார். ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்றார். கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். லிட்டில் பிளவர் கல்விக் குழுமத்தலைவர் அ. மரிய சூசை நூலைவெளியிட்டார். சித்த மருத்துவர் இ.முருகன், மன்றத்தின் நிறுவனத் தலைவர் மணி பெற்றுக்கொண்டனர். நல்லாசிரியர் நடராஜன், தமிழாசிரியர் வை. சிவசங்கரன் நூல் மதிப்புரை வழங்கினர். மணி நன்றி கூறினார்.