Regional01

தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் தா.ஆனந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் போன்றபல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 1.4.2021 முதல் அகவிலைப்படி உயர்த்திவழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் ரூ.4374, உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.6,245, பொதுமோட்டார் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7,148,திரையரங்கு தொழிலாளர்களுக்கு ரூ.6,710, மருத்துவமனை மற்றும் நர்சிங்ஹோம் பணியாளர்களுக்கு ரூ.7,277, பாதுகாவல் பணியாளர்களுக்கு ரூ.6,102, சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4,307, பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு 1000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.120.42, உள் பணியாளர்களுக்கு ரூ.6,485அகவிலைப்படி உயர்த்தி வழங்கவேண்டும். இத் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை 1.4.2021 முதல் வழங்கவேண்டும். இந்த அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஊதியம்சேர்த்து 1.4.2021 முதல் நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு வழங்க தவறினால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT