Regional02

உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக ‘ஸ்டேட்டஸ்’ வைத்த இளைஞர் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவர், வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வாட்ஸ் அப்-ல் மூழ்கியிருந்துள்ளார். இவரதுவாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு அதிகமான விருப்பங்கள் (லைக்ஸ்) கிடைக்கவில்லையாம். இதனால், தனது படத்தை போட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போல் உருவாக்கி, அதனை வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர், தான் உயிரோடு இருப்பதாகவும், இறந்ததாக ஸ்டேட்டஸ்வைத்தால் என்ன மாதிரியான விளைவு வருகிறது என்று பார்ப்பதற்காக வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனால் கோபமான அவரது நண்பர்கள், உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.

SCROLL FOR NEXT