தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட 27 பேருக்கு, நிவாரணத் தொகையாக தமிழக அரசு ரூ.9 லட்சம் வழங்கியுள்ளது. இத்தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதள பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.
இதில், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் ஜோசி தேர்வு செய்யப்பட்டு பதக்கம் பெற்றுள்ளார். அவரை, எஸ்பி பாராட்டினார்.