Regional03

சங்கரன்கோவில் கல்லூரியில் உலக புத்தக தின விழா :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா இணையவழியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் வேணுகோபால் வரவேற்றார். கணினி அறிவியல் துறைத் தலைவர் அனுசுயா அறிமுக உரையாற்றினார்.

‘வாசித்துதான் பார்ப்போம்வாருங்கள்’ என்ற தலைப்பில்எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், ‘வழிநடத்துவதற்கான வாசிப்பு’ என்ற தலைப்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நூலகர் சித்ரா தவப்புதல்வி ஆகியோர் உரையாற்றினர். சமூகவியல் துறைத் தலைவர் சுகுமாறன் நன்றி கூறினார். தமிழ்த் துறை தலைவர் விஜிலா ஜாஸ்மின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

SCROLL FOR NEXT