Regional03

கரோனாவால் உயிரிழந்தவரின் - உடலை தகனம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள் :

செய்திப்பிரிவு

சேரன்மகாதேவியில் கரோனாவால் உயிரிழந்த 72 வயது மூதாட்டி உடலை எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் தகனம் செய்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தமூதாட்டி கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுதகனம் செய்யுமாறு உறவினர்களும், சுகாதாரத்துறையினரும் எஸ்டிபிஐ கட்சி திருநெல்வேலி புறநகர் மாவட்டத் தலைவர்பீர்மஸ்தானை தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் சித்தீக் தலைமையிலான தன்னார்வ குழுவினர் மூதாட்டி உடலை தகனம் செய்தனர்.

SCROLL FOR NEXT