Regional03

நாறும்பூநாத சுவாமி கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடுகள் ரத்து :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் கு.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி திருக்கோயிலில் இன்று சனிப்பிரதோஷமானது மகாபிரதோஷமாக சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற உள்ளதாகதிருக்கோயில் நிர்வாகத்துக்கு சற்றும் தொடர்பில்லாத தனிநபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் 2-ம்அலை தீவிரமாகப் பரவி வருவதைமுன்னிட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளைப் பின்பற்றி, இன்று இத்திருக்கோயிலில் சனிப்பிரதோஷத்தின்போது சிறப்பு வழிபாடுகள் எவையும் நடைபெறாது.

பிரதோஷ அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரதோஷ நேரம் முடிவடைந்தபின் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT