Regional02

ஜவ்வாதுமலையில் திடீர் மழை :

செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலை மற்றும் செங்கம் பகுதியில் நேற்று மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தி.மலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. 102 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரிப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர். பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால், வெளியே வருவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜவ்வாது மலை மற்றும் செங்கம் சுற்றுப் பகுதியில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. பல இடங்களில் சுமார் 1 மணி நேரத்துக்கு மிகாமல்மழை பெய்துள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT