காஞ்சி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் வரதராஜ பெருமாள் கோயில் நடவாவி உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு சித்ராபவுர்ணமி அன்றும் நடவாவி உற்சவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலாற்றில் கூடுவர். இந்த ஆண்டு விழா வரும் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தற்போது கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், கோயில் திருவிழா சார்ந்தநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நடவாவி உற்சவத்தையும் ரத்து செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.