ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங் கில் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண் மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடை முறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் சில புதிய கட்டுப்பாடு களுடன் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்து முதல்வரால் பல்வேறு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
அதில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல்காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும். எப்எல் வரிசை (எப்எல் 6 தவிர) 20.4.2021 முதல் 30.4.2021 வரைஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அன்று டாஸ்மாக் கடைமுழுவதும் மூடவும், மற்ற தினங்களில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடனும் இரவு 9 மணி வரை மட்டும் கடைகள் செயல்படவும் உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தி லுள்ள அனைத்து எப்எல் வரிசை (எப்எல் 6 தவிர) உரிமம் பெற்று இயங்கும் ஹோட்டல் பார்கள் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கின் போது மதுவிற்பனை செய்யாமல் மூடப்பட் டிருக்கவேண்டும்.
இதனை மீறி எவரேனும் கடை கள் மற்றும் மது அருந்தும் கூடங் களில் மதுபானங்கள் விற்றால், திறந்து வைத்திருந்தாலோ கடைமேற்பார்வையாளர் பெயரிலும், பார் உரிமையாளர்கள் பெயரிலும்குற்றவியல் நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவிக்கப் படுகிறது.