புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்கபைரவி நகர் தார்சாலை சேதடைந்து போக்கு வரத்து செல்ல முடியாத நிலை யில் இருந்தது. அப்பகுதி மக்கள் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். இதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக பழைய சாலையை பொக்லைன் இயந் திரம் மூலம் பெயர்ந்து எடுத்தனர். பின்னர் அந்த சாலையில் ஜல்லிகொட்டப்பட்டு சாலை முழுவதும்பரப்பப்பட்டது. அதன் பிறகு அந்த சாலையில் எந்தவிதமான பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை பணியை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட் டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் உடனே இந்த சாலைப்பணியை தொடங்கி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.