Regional02

இரவு பணி செல்பவர்களுக்கு அடையாள அட்டை அவசியம் : தேனி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது.

இதில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தலைமை வகித்துப் பேசியதாவது: பொது மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழிற் சாலைகள், அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களில் இரவு நேர பணிக்குச் செல்லும் பணியாளர் களும், தனியார் நிறுவன இரவு காவல் பணிபுரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதிக் கடிதம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்துக்குச் சென்று திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ மனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் பிற வாடிக்கையா ளர்கள் தங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT