Regional02

கரோனா தொற்று பரவலைத் தடுக்க - ராசிபுரம் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை இடமாற்றம் :

செய்திப்பிரிவு

ராசிபுரம் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையை இடமாற்றம் செய்து, நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ராசிபுரம் நகராட்சியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட் இன்று முதல் (23-ம் தேதி) ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் செயல்படும். ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் அதிகாலையில் இயங்கி வரும் காய்கறிக்கடைகள் அனைத்தும் சேந்தமங்கலம் சாலை பிரிவிலுள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்திற்கு எதிரில் உள்ள காலி மைதானத்தில் இன்று முதல் செயல்படும்.

பொதுமக்கள் கவனத்தில் கொண்டு தொற்று பரவாத வகையில் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து காய்கறி சந்தையில் பொருட்கள் வாங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT