ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3098 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 225 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 17 ஆயிரத்து 874 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, இதில் 16 ஆயிரத்து 33 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 1689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று 225 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 786 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, அரசு மருத்துவமனைகளில் 684 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 298 பேரும், புற நோயாளிகள் 69 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 3000 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றுவரை 4 லட்சத்து 79 ஆயிரத்து 443 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நேற்று மட்டும் 3098 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. மாவட்டத்தில் 21-ம் தேதி வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 845 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
75 வழக்குகள் பதிவு