Regional01

லாரி ஓட்டுநரிடம்பணம் கொள்ளை :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (33). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு கறிக்கோழிகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளார். இவருடன் உதவியாளர் முருகேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் வந்துள்ளனர்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரமாக மினி லாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலையில் சந்தோஷ்குமார் இயற்கை உபாதையை கழிப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் சந்தோஷ்குமாரின் கை, கால்களை கட்டி விட்டு, லாரியிலிருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

இதேபோன்று மற்றொரு லாரி ஓட்டுநர் ஒருவரிடமும் ரூ.5 ஆயிரத்தை இந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT