பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (27), சநதிரசேகர்(22) , கண்ணன்(23), மாதவன் (19)ஆகிய 4 பேரை போலீஸார் கடந்த 8-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய் யப்பட்டன. களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர், 4 பேரும் அங்கிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று மாற்றப்பட்டனர். நேற்று மாலையில் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் கல்லால்தாக்கியதில் முத்து மனோவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து மனோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதிகள் மோதலால் மத்திய சிறையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக மத்திய சிறையில் உள்ள 7 பேரிடம் சிறைத்துறை காவல்துறையி னரும், பெருமாள்புரம் காவல் துறை யினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை கைதி முத்து மனோ கொலைவழக்கு தொடர்பாக பெருமாள்புரம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.