Regional03

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறுக்குசாலை சிந்தலக்கட்டை முருகையாநகர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சேகர் கொம்பன் (55). இவரை கொலை முயற்சி வழக்கில் ஓட்டப்பிடாரம் போலீஸார் கடந்த 22.03.2021 அன்று கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் அஜய் மாடசாமி (40) மற்றும் லெட்சுமணன் மகன் சண்முகவிக்னேஷ் (23) ஆகிய இருவரையும் கொலை மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி வடபாகம் போலீஸார் கடந்த 31.03.2021 அன்று கைது செய்தனர். இதேபோல், தூத்துக்குடி ஆனந்தா நகரைச் சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜ் (31) என்பவரை கொலை மிரட்டல் வழக்கில் தாளமுத்துநகர் போலீஸார் கடந்த 23.03.2021 அன்று கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT