தூத்துக்குடியில் பெண்களுக் கான முதல் ரோட்டரி சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ரோட்டரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பெண்களை மட்டுமேஉறுப்பினர்களாக கொண்டு `டிரையல் பிளேசர்ஸ்’ என்ற புதியரோட்டரி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக டாக்டர் பிளோரா ஜுவானிட்டா பதவியேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் முருகதாஸ், உதவிஆளுநர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.