TNadu

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்: நில அளவையர் கைது :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜா சிதம்பரம்(54), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த விராலூர் பகுதியில் வாங்கிய ஒரு நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரி விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு நில அளவையர் தங்கதுரை(36), ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை ஊழல்தடுப்பு, கண்காணிப்பு பிரிவில் ராஜா சிதம்பரம் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தந்த ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை நேற்று தங்கதுரையிடம் ராஜா சிதம்பரம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தங்கதுரையை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT