Regional02

ஊரடங்கை மீறியதாக ஈரோட்டில் 50 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு தோறும் ஊரடங்கினை அரசு அறிவித்துள் ளது. நேற்று முன் தினம் இரவு ஊரடங்கு அமலானது. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், 12மாவட்ட சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு இடங்களில் ரோந்து சென்றும், வாகனச் சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் வந்த வாகனங் களை நிறுத்தி விசாரணை மேற் கொள்ளப்பட்டது.

அரசு அனுமதித்துள்ள அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட கடைகள் உட்பட ஊரடங்கை மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அடுத்து வரும் நாட்களில்ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT