திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள். 
Regional02

கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகாரிகள் ஆய்வு :

செய்திப்பிரிவு

இதையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் சதிஷ்குமார் தலைமையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாவட்ட சுகாதாரக் குழு அலுவலர் சாந்தி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்திய அலுவலர்கள், குடியிருப்போர் அனைவரும் மருத்துவ முகாமில் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவித்தனர். ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் சுப்பிரமணி, பேரூராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் ரவிக்குமார் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT