தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் காவல் துறை சார்பில் தூத்துக்குடி நகர துணைக் கோட்டத்தில் 317 பேர், தூத்துக்குடி ஊரக துணைக் கோட்டத்தில் 95, திருச்செந்தூர் 93, வைகுண்டம் 70, மணியாச்சி 131, கோவில்பட்டி 193 பேர், விளாத்திகுளம் 137 மற்றும் சாத்தான்குளம் துணைக் கோட்டத்தில் 53 பேர் என, முகக்கவசம் அணியாத 1,089 பேருக்கு ரூ. 2,17,800 அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 பேரிடம் ரூ. 7,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.