தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர், குரும்பூர் அருகே நல்லூர் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகன் சரவணன் (41) என்பவர், உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் மணலை டாரஸ் லாரியில் கொண்டு சென்றது தெரியவந்தது.
பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், சரவணனை குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமஸ் கைது செய்தார். 2 யூனிட் எம்.சாண்ட் மணலும், டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.