Regional01

லால்குடி அருகே தாயை கொன்ற மகன் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகேயுள்ள ஆலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மனைவி சரஸ்வதி(55). கணவர் இறந்துவிட்ட நிலையில், குடும்பச் சொத்துகளை தங்களது 2 மகன்களுக்கும் சரஸ்வதி பிரித்துக் கொடுத்துள்ளார். இதற்கு மூத்த மகன் தர்மராஜ்(36) உடன்படவில்லை.

இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த தர்மராஜ் தனது தாய் சரஸ்வதியின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த சரஸ்வதி லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து தர்மராஜை கல்லக்குடி போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT