இந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி பிராண்டான கல்யாண் ஜூவல்லர்ஸ் ஏப்.24-ம் தேதி திருச்சியில் தனது புதிய ஷோரூமை திறக்க உள்ளது.
தமிழகத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து இந்த புதிய ஷோரூம் ஏப்.24-ம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படவுள்ளது என இந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி.எஸ்.கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: திருச்சி வாணப்பட்டறை தெரு செயின்ட் ஜோசப் கல்லூரி சாலையில் ஏப்.24-ம் தேதி புதிய ஷோரும் திறக்கப்பட உள்ளது. இது திருச்சியில் திறக்கப்படும் 2-வது ஷோரூம். கல்யாண் ஜூவல்லர்சின் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யம் கலெக்ஷன் நகைகள் இங்கு கிடைக்கும். நகைகளை பொறுத்து செய்கூலி 3 முதல் 8 சதவீதமாக இருக்கும்.
எங்கள் நிறுவனம் கடந்த 2002-ல் தனது செயல்பாட்டை தமிழகத்தில் தொடங்கியது. தற்போது எங்கள் ஷோரூம்கள், இந்தியா முழுவதும் 107 இடங்களில் உள்ளன.
திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக வைர நகைகளுக்கு 25 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், கற்கள் பதித்த நகைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகையின் மொத்த தொகையில் 10 சதவீத தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் விலை பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படும். இந்த சலுகையானது எதிர்காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்களை பாதுகாக்க உதவும். இங்கு கழிவு கட்டணமானது 3 சதவீதம் முதல் தொடங்குகிறது.
மேலும், தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கழிவு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த சலுகை மே 30-ம் தேதி வரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.