சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட பூசாரியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட - பூசாரி உடலை வாங்க மறுத்து போராட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே சீவலப் பேரியில் கொலை செய்யப்பட்ட பூசாரியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக அவரது உறவினர் கள் மறியலில் ஈடுபட்டனர்.

சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் கடந்த 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்நிலையில், சிதம்பரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண உதவியாக குடும்பத் துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். சிதம்பரத்தின் சடல த்தை கோயில் வளாகத்தில் புதைக்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 3-வது நாளாக நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக திருநெல்வேலி கோட்டாட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி நடத்திய பேச்சுவார்த்தை தோல்விய டைந்தது. பின்னர் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் மறியல் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT