Regional01

கரோனா விதிமுறைகள் மீறல் ரூ.55.96 லட்சம் அபராதம் வசூல் :

செய்திப்பிரிவு

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு ஆலோ சனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசிய தாவது: அரசு விதிமுறையின்படி திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு நேர்வில் 50 நபர்களுக்கு மிகாமலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ளலாம். இதற்கென சிறப்பு அனுமதி ஏதும் மாவட்ட நிர்வாகத்திலிருந்து தனியே பெறத் தேவையில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊரக பகுதிகளில் வட்ட அளவிலும், மாநகராட்சி பகுதிகளில் மண்டல அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இதுவரை நடத்திய ஆய்வில் விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து அபராத தொகையாக ரூ.55,96,000 வசூலிக்கப்பட்டுள்ளது. திருநெல் வேலி மாநகராட்சி சார்பில் அனை த்து வரிசெலுத்தும் மையங்களிலும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் அலுவலகங்களிலும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்கையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ள புறக்காவல் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி பெறத் தேவையில்லை.

SCROLL FOR NEXT