Regional03

சூதாட்டத்தில் ஈடுபட்ட : 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

சிப்காட் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையடிவாரத்தில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட சதீஷ்குமார் (40), புண்ணியகோட்டி(53), சுப்பிரமணி(39), சையத்(42) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT