Regional02

திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் - கரோனா முகாம் நடத்த வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் தொழிற்சாலைகளில் கரோனா தொற்று பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டுமென ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் என்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனுவில், "தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் திருப்பூர். கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவும் சூழலில், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து, கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள்தேவையான அளவு நடைபெறவில்லை. எனவே, அப்பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு முகக் வசம், கையுறை, கை கழுவுவதற்கான சோப்பு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அந்தந்த நிர்வாகங்கள் வழங்க உத்தரவாதம் செய்ய வேண்டும், நோய் வராமல் தடுக்க பரிசோதனை முகாம், தடுப்பூசி முகாம் உள்ளிட்டவற்றை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற தொழிற்சாலை நிர்வாகமும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

நோயால் பாதிக்கப் பட்டவர் களுக்கு சிறப்பு முகாம் அமைத்துபாதுகாப்பு வழங்க வேண்டும். நோய்பாதிக்கப்பட்டவர்கள் மாதக்கணக்கில் வேலைக்கு போக முடியாமலும், வருமானம் இன்றியும் இருப்பதால் அவர்களது குடும்பத்தினரும் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு இஎஸ்ஐ மூலமாகபகுதி நேர ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலமாக, தேவையான நிவாரணம் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT