Regional02

அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்திய : கம்பத்தை சேர்ந்த 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையிலிருந்து திருச்சிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரம் பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் அப்பேருந்தில், டிக்கெட் பரிசோதனை அலுவலர் கந்தன் பரிசோதனை மேற் கொண் டார். அப்போது, அங்கிருந்த ஒரு பெரிய பைக்கு லக்கேஜ் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என கேட்டதற்கு, அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த நடத்துநர் ஏழுமலை அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பேருந்தை மங்களமேடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் பய ணித்த கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த அறிவு செல்வம் மகன் செல்வம் (31), அப்துல்லா அஜிஸ் மகன் முஜீபுர் (32) ஆகியோரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் திருப்பதியில் இருந்து தேனிக்கு கஞ்சாவை கடத்திச் செல்வது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT