Regional01

தொழில் மையத்துக்கு ஐஎஸ்ஓ அங்கீகாரம்; ஆட்சியர் பாராட்டு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஒற்றை சாளர அனுமதியும் வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்காக மாவட்ட தொழில் மையத்துக்கு தர மேலாண்மை அமைப்புக்கான உரிமம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் இந்திய தர நிர்ணய நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில் ஆய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்துக்கு ஐஎஸ்ஓ-9001 சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT