ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், இரவு நேரத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஈரோடு நகரில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
கொடிவேரி, குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், நம்பியூர், சத்தியமங்கலம், பவானி, தாளவாடி, சென்னிமலை, பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோட்டில் மழைப்பதிவு விவரம் (மி.மீ):
ஈரோடு 45, குண்டேரிபள்ளம் 24.6, நம்பியூர் 23, கொடிவேரி 15.4, சத்தியமங்கலம், பவானி 15, தாளவாடி 10, சென்னிமலை 9, பெருந்துறை 8, வரட்டுப்பள்ளம் 6. மி.மீட்டர்.