தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் (27). இவர்நேற்று தனது வீட்டின் அருகே உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மீளவிட்டானுக்கு செல்லக்கூடிய ரயில் தண்டவாளத்தை கடக்க முயன் றார். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பரமசிவன் உயிரிழந்தார். தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.