கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயங்காது.
இதையொட்டி, அரசுப் பேருந்துகளை இயக்கப்படும் நேரத்தில் திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் மாறுதல் செய் துள்ளது. நகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். தொலை தூரம் மற்றும் புறநகருக்கு இயக் கப்படும் கடைசி பேருந்து நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு மாலை 5 மணிக்கும், பெங்களூருவுக்கு மாலை 4 மணிக்கும், புதுச்சேரிக்கு மாலை 6 மணிக்கும், செங்கம் மற்றும் விழுப்புரத்துக்கு இரவு 8 மணிக்கும், கள்ளக்குறிச்சி, வேலூர், ஆரணி மற்றும் திருக்கோவிலூருக்கு இரவு 7.30 மணிக்கும், வந்தவாசிக்கு இரவு 7 மணிக்கும் அரசுப் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும்.
போளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4 மணிக்கும், வேலூர் மற்றும் ஆரணிக்கு இரவு 7.30 மணிக்கும், செங்கத்துக்கு மாலை 6.30 மணிக்கு அரசுப் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும்.
ஆரணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், வேலூர் மற்றும் தி.மலைக்கும் மாலை 6 மணிக்கும், செய்யாறுக்கு இரவு 8 மணிக்கும் அரசுப் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும்.
செய்யாறு பேருந்து நிலை யத்தில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், ஆரணிக்கு இரவு 7 மணிக்கும், வந்தவாசிக்கு இரவு 8 மணிக்கும் அரசுப் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும்.
வந்தவாசி பேருந்து நிலை யத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் போளூருக்கு மாலை 6 மணிக்கும், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலைக்கு மாலை 5 மணிக்கும், செய்யாறுக்கு 7 மணிக்கும் அரசுப் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும்” என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.