Regional02

கரோனா பிரச்சினையால் வறுமையில் குடும்பங்கள் - 50% தளர்வுகளுடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் : ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இருந்து நாதஸ்வரம், மேள, தாளங்கள் முழங்க, சமையல் பாத்திரங்கள், மைக், விஷேசங்களில் வைக்கப்படும் வண்ண விளக்குகளில் ஒளிரும் போர்டுகள், தென்னை ஓலையால் வேயப்பட்ட பந்தல் சகிதமாக, ஊர்வலமாக சென்று திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் மாவட்ட தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் அளித்த மனுவில், "எங்கள் அமைப்பின் கீழ் இயங்கும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், வாடகை பாத்திரக் கடைகள், பந்தல் அமைப்பாளர்கள், மேடை அலங்காரம் உள்ளிட்ட தொழில்கள் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய, கோயில் விழாக்கள் மற்றும் திருமண விஷேசங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வாழ்வாதாரத்தை காக்கும் முயற்சியாக மற்ற தொழில்களுக்கு 50 சதவீத தளர்வுகள்போல, எங்கள் தொழில் சார்ந்த கோயில் விழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்டவற்றுக்கும் வழங்கி, அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும்.

கடந்த ஓராண்டாக கரோனா வால் பல குடும்பங்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றன. எனவே 50 சதவீத தளர்வுகளுடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT