சேலத்தில் நேற்று ஒரே நாளில் 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,300 பேர் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 352 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 7 பேர் வெளியூர்களில் இருந்து சேலம் வந்தவர்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். சேலத்தில் 25 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்த 2,300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் கண் காணிப்பில் உள்ளனர்.
ஈரோடு
1226 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்று காரணமாக இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.