கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் மாரி தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பது:
கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து, மேடை நாடகம், பம்பை, உடுக்கை, நையாண்டி மேளம், பறை இசை போன்ற கிராமியக் கலைஞர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேல் வசித்து வருகிறோம். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு எங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்தாண்டு தொழில் நடக்கும் என்று கடன் வாங்கி குடும்பத்தை நடந்தி வந்தோம். திருவிழாக் காலம் தொடங்கும் நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு என்பதால் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அனைத்துக்கும் தளர்வு அளித்திருக்கும் அரசு எங்களு டைய கலை நிகழ்ச்சியும் சிறு சிறு கிராமங்களில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும். கலை பண்பாட்டுத்துறை அடையாள அட்டை, நலவாரிய புத்தகம் வைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்துக்கும் தளர்வு அளித்திருக்கும் அரசு எங்களுடைய கலை நிகழ்ச்சியும் சிறு சிறு கிராமங்களில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும்.