Regional02

கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி :

செய்திப்பிரிவு

எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக் காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை செக்கானூர், நெரிஞ்சிப் பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக் கோட்டை பகுதிகளில் கதவணைகளில் தேக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கதவணைகளில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் 15 நாட்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி, கோனேரிப்பட்டி கதவணையில் தற்போது பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

கதவணையில் தேக்கப்பட்டதண்ணீரை வெளியேற்றி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப் பட்டு வருவதால், அங்கு மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT