தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஏரல் தாலுகா தலைவர் எஸ்.வெள்ளச்சாமி, செயலாளர் க.சுப்புதுரை ஆகியோர் தலைமையில், வைகுண்டம் வடகால், தென்கால் பாசன விவசாயிகள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
பாபநாசம் அணையில் தற்போது 105 அடியும், மணிமுத்தாறு அணையில் 98 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த காலங்களில் 70 அடி தண்ணீர் இருக்கும் போதே முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு போதுமான நீர் இருந்தும் இதுவரை முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் 25-ம் தேதிக்குள் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.