கரோனா பாதிப்பால் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த குடியாத்தம் வட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional01

தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு மாதந்தோறும் - ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி மனு :

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் திரு விழாக்கள் நடத்த தடை விதிக் கப்பட்டுள்ளதால் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ‘‘கரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், குடியாத்தம் பகுதியில் உள்ள தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய கோயில்கள் மற்றும் கிராமிய கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். அல்லது மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

அதேபோல், கலை பண்பாட்டு துறை அலுவலகம் இல்லாததால் கிராமியக் கலைஞர்கள் அவர்களுக்கான சலுகைகள் பற்றி அறிய முடியவில்லை. மேலும், வயது முதிர்ந்த காலத்தில் கலை ஞர்களால் வெகு தொலைவில் உள்ள கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்துக்கு பயணம் செய்ய முடியவில்லை. எனவே, வேலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை கிளை அலுவலகம் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT