Regional02

நடிகர் விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி :

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்ம திருச்செங்கோடு எனும் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் வீரமணி தலைமை வகித்தார். நம்ம திருச்செங்கோடு அமைப்பின் தலைவர் சேன்யோ குமார் முன்னிலை வகித்தார். அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும், வேலூர் சாலை டிசிஎம்எஸ் வளாகம் அருகே விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோயில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணியும் மேற் கொள்ளப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT