Regional02

உணவு விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே திருமழிசையில் ‘இருட்டுக் கடை‘ என்று அழைக்கப்படுகிற தனியார் உணவு விடுதி செயல்படுகிறது. இந்த உணவு விடுதியின் மீது நேற்று மாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவத்தில், உணவு விடுதியின் முகப்பு கண்ணாடி மட்டும் சேதமடைந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளவேடு போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, திருமழிசை பகுதியை சேர்ந்த எபி என்ற ரவுடி, உணவு விடுதியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ஆகவே, இதில் அவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT